Monday 02 2020

Peachiparai dam & Island - Kanyakumari


 
Pechiparai Reservoir is a reservoir located 43 kilometres (27 mi) from the town of Nagercoil, near the village of Pechiparai in Kanyakumari DistrictTamil NaduIndia.The reservoir was formed by the construction of the Jincy Dam, which was built across the Kodayar River about 1 mi (1.6 km) below the confluence of the Kallar, Chittar and Kuttiyar tributaries. It was built during the period 1897 - 1906 by the European engineer, Mr. Minchin,(called as mookanthurai by the local people) during the reign of the Travancore Maharaja Moolam Thirunal.The original cost of construction of the dam was Indian Rupees 216.1 Lakhs (in the late 19th century). The catchment area of the reservoir is 207.19 km2 (80.00 sq mi), and the depth is 14.63 m (48.0 ft). The dam is a straight gravity type masonry dam 425.5 m (1,396 ft) long and 120.7 m (396 ft) high above the deepest foundation. There is no inspection gallery.



The water from the reservoir is used for both irrigation of crops and for drinking purposes, which has led to conflict between farmers who want to use all the water for their crops, and local authorities, who don't have another place to draw drinking water from, for supply to the urban areas. The dam is surrounded by hills of the Western Ghats.


பேச்சிப்பாறை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரிய அணையாகும். இது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பேச்சிப்பாறை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இது மாவட்டத்தலைநகர் நாகர்கோவிலிலிருந்து 43 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இவ் அணை கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1897-1906 காலகட்டத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு மிஞ்சின் அவர்களால் அப்போதைய திருவிதாங்கூர் மகாராசா மூலம் திருநாள் காலத்தில் கட்டப்பட்டது.இதன் அப்போதைய கட்டுமானத்திற்காக செலவளிக்கப்பட்ட தொகை 26.1 லட்சம். இவ்வணை கன்னியாகுமரி மாவட்டத்தின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றது. இவ்வணை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டிமுடிக்கப்பட்டது. கல்குளம், அகத்தீசுவரம், தோவாளை மற்றும் ராதாபுரம் ஆகிய வட்டங்கள் இதன் மூலம் பலன் பெறுகின்றன. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதி பெறுகின்றது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 207.19 சதுர கிலோமீட்டர்கள் ஆழம் 14.6 மீட்டர்கள் ( 48 அடி). அணையின் நீளம் 425.5 மீட்டர்கள் உயரம் 120.7 மீட்டர்கள் .இங்கு பேச்சியம்மன் பெயாில் சிறு கோயில் ஒன்று கட்டப்பட்டு தெய்வ வழிபாடும் நடைபெற்று வருகிறது.




No comments: