சிதறால் சமணக் கோயில் (Chitharal Jain Monuments), இதனை உள்ளூர் மக்கள் சிதறால் குகைக் கோயில் என்றும், சிதறால் பகவதியம்மன் கோயில் என்றும் அழைப்பர்.சிதறால் மலையில் சமணக் குடைவரைக் கோயில், கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டதாகும்.
இக்குடைவரைக் கோயிலில் சமண சமயத்தின் மகாவீரர், பார்சுவநாதர் போன்ற தீர்த்தங்கரர்கள் மற்றும் பத்மாவதி தேவதையின் சிற்பங்களைச் சுற்றிலும் யட்சர்கள் மற்றும் யட்சினிகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர்களை வழிபடுவிதமாக அம்பிகை, வித்தியாதரர்களின் சிற்பங்கள் உள்ளது.இக்குடைவரைக் கோயில்கள் திகம்பர சமணப் பிரிவினர் நிறுவியதாகும்.முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (610-640) காலத்தில், சிதறால் கிராமப் பகுதி, சமணர்களின் செல்வாக்கு செழித்திருந்தது.
இக்குடைவரைக் கோயில் மண்டபம், முற்றம், பலி பீடம், சமையல் அறைகள் கொண்டது. இங்குள்ள மூன்று முக்கிய சந்நதிகளின் நடுவில் மகாவீரர் சிற்பமும், இருபுறங்களிலும் பார்சுவநாதர் மற்றும் பத்மாவதி தேவியின் சந்நதிகள் உள்ளது. இக்குடைக் கோயில் அருகில் இயற்கையில் அமைந்த குளம் உள்ளது. கிபி 13ஆம் நூற்றாண்டில் இச்சமணக் குடைவரைக் கோயிலில், பகவதியம்மனை பிரதிட்டை செய்து இந்து சமயக் கோயிலாக மாற்றப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
முன்னர் இக்குடைவரைக் கோயில் சமண சமயத் துறவிகளின் சமயக் கல்விக் கூடமாக விளங்கியதென இங்குள்ள தமிழ் வட்டெழுத்து கல்வெட்டுகள் கூறுகிறது.
தற்போது இக்குடைவரைக் கோயில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது.
No comments:
Post a Comment